தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க கோரி வெளியுறவுத் துறை மந்திரிக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்

இலங்கையால் சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க கோரி வெளியுறவு மந்திரிக்கு முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க கோரி வெளியுறவுத் துறை மந்திரிக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்
Published on

சென்னை,

தமிழக முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் மத்திய வெளியுறவுத் துறை மந்திரி ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் கூறியதாவது:

தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை தொடர்ந்து கைது செய்து வருகிறது. அத்துடன், மீனவர்களின் படகுகளையும் பறிமுதல் செய்து வருகிறது. இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவிக்க வேண்டும்.

மேலும், மீன்பிடிப் படகுகளின் உரிமையாளர்கள் இலங்கை நீதிமன்றத்தில் நேரில் ஆஜராவதிலிருந்து விலக்கு அளிக்க உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று அந்த கடிதத்தில் அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com