ரூபாய் மதிப்பு வீழ்ச்சிக்கு மோடிதான் பொறுப்பேற்க வேண்டும் - திருமாவளவன் பேட்டி

ரூபாய் மதிப்பு வீழ்ச்சிக்கு மோடிதான் பொறுப்பேற்க வேண்டும் என்று விசிக தலைவர் திருமாவளவன் கூறினார்.
ரூபாய் மதிப்பு வீழ்ச்சிக்கு மோடிதான் பொறுப்பேற்க வேண்டும் - திருமாவளவன் பேட்டி
Published on

சென்னை,

சென்னை அசோக் நகரில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மல்லிகார்ஜூன கார்கேவிற்கு வாழ்த்துகள். நேரு குடும்பத்திற்கு அப்பாற்பட்டவர் தலைவராக தேர்வு காங்கிரஸ் மீதான நம்பத்தன்மையை உயர்த்தியிருக்கிறது.

பாஜகவிற்கு எதிரான அரசியல் சக்திகளை ஒருங்கிணைக்கும் பணிகளை மல்லிகார்ஜூன கார்கே முன்னெடுக்க வேண்டும். 3-வது அணி ஒன்று ஏற்படாமல் தடுக்க வேண்டிய பொறுப்பு காங்கிரஸ் கட்சிக்கு உள்ளது.

ஆட்சிக்கு வந்தால் ரூபாய் மதிப்பை உயர்த்துவதாக பிரதமர் மோடி கூறினார். பாஜக அரசின் மதவெறி, பொருளாதாரத்திலும் மிகப்பெரும் தாக்கம் ஏற்படுத்தியுள்ளது. ரூபாய் மதிப்பு வீழ்ச்சிக்கு பிரதமர் மோடி தான் பொறுப்பேற்க வேண்டும்.

இந்திய கடற்படையை சேர்ந்தவர்களே தமிழ்நாட்டின் மீன்பிடி படகு என கண்டறிந்த பிறகும் தாக்குதல் நடத்தியிருக்கிறார்கள். இந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் தொடர்புடையவர்களை கைது செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com