மோடி மீண்டும் பிரதமராக வரக்கூடாது - பா.ஜ.க. முன்னாள் எம்.பி. சுப்பிரமணியன் சுவாமி

தமிழ்நாட்டில் பா.ஜ.க. வேட்பாளர்களில் நயினார் நாகேந்திரன் வெற்றி பெறுவார் என்று சுப்பிரமணியன் சுவாமி கூறியுள்ளார்.
கோப்புப்படம் 
கோப்புப்படம் 
Published on

மதுரை,

மதுரை மாவட்ட பா.ஜ.க. நிர்வாகி இல்ல திருமண நிகழ்ச்சி மதுரை தெப்பக்குளம் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்த திருமண நிகழ்வில் பா.ஜ.க. மூத்த தலைவரும், முன்னாள் எம்.பியுமான சுப்பிரமணியன் சுவாமி கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சுப்பிரமணியன் சுவாமி கூறியதாவது:-

எனக்குத் தெரிந்து தமிழ்நாட்டில் பா.ஜ.க. வேட்பாளர்களில் நயினார் நாகேந்திரன் வெற்றி பெறுவார். மற்றவர்கள் பற்றி எனக்கு தெரியாது. கனவு எல்லாருக்கும் இருக்கிறது. அது நடக்குமா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும். வேட்பாளர்களை எல்லா இடத்திலும் நிறுத்தலாம். அமைப்பு வலுவாக உள்ளதா என்பதை பார்க்க வேண்டும். பணத்தை கொடுத்து விளம்பரம் செய்தால் மட்டும் போதாது. மக்கள் நம்ப வேண்டும்.

சீனா, இந்தியாவில் ஆக்கிரமிப்பு செய்ததை பிரதமர் மோடி தடுக்கவில்லை. பொருளாதார ரீதியாக பின்தங்கி உள்ளோம். மாலத்தீவுடன் பிரச்சினை உள்ளது. என்ன செய்தார் மோடி. ஒன்றும் செய்யவில்லை. பா.ஜ.க. கேட்டால் பிரசாரத்திற்கு செல்வேன். மோடி மீண்டும் பிரதமராக வரக்கூடாது. அவர் தோற்கடிக்கப்பட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com