வீட்டின் கதவை உடைத்து பணம், பொருட்கள் திருட்டு

கன்னியாகுமரி அருகே வீட்டின் கதவை உடைத்து பணம், பொருட்கள் திருட்டு
வீட்டின் கதவை உடைத்து பணம், பொருட்கள் திருட்டு
Published on

கன்னியாகுமரி அருகே வீட்டின் கதவை உடைத்து பணம், பொருட்களை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

பூட்டிய வீடு

கன்னியாகுமரி அருகே உள்ள மகாராஜபுரம் கீழ ஆற்றங்கரை பகுதியைச் சேர்ந்தவர் ராதா. இவர் கடந்த 25-ந் தேதி தனது வீட்டை பூட்டிவிட்டு வெளியூர் சென்றார். நேற்று காலையில் வீட்டுக்கு வந்த போது பின்புற கதவு உடைக்கப்பட்டு இருந்தது. உள்ளே சென்று பார்த்த போது துணிகள் சிதறிக் கிடந்தன. மேலும், வீட்டில் இருந்து ரூ.10 ஆயிரம் மற்றும் பாத்திரம் உள்ளிட்ட பொருட்கள் திருடப்பட்டிருந்தது.

வீட்டில் ஆட்கள் இல்லாததை நோட்டமிட்ட யாரோ மர்ம நபர்கள் கதவை உடைத்து பொருட்களை திருடி சென்றுள்ளனர்.

போலீசார் விசாரணை

இதுகுறித்து கன்னியாகுமரி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். மேலும், கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு அங்கு பதிவான கைரேகைகள் பதிவு செய்யப்பட்டது.

இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி மர்ம நபர்களை தேடி வருகிறார்கள். பூட்டிய வீட்டில் கதவை உடைத்து பணம், பொருட்கள் திருடப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com