மாதாந்திர பராமரிப்பு பணி: தூத்துக்குடியில் நாளை மின்தடை

தூத்துக்குடி மின்பகிர்மான வட்டம், அரசு துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளது.
மின்தடை
Published on

தூத்துக்குடி,

தூத்துக்குடி மின்பகிர்மான வட்டம், நகர்ப்புற மின் விநியோக பிரிவிற்கு உட்பட்ட துணைமின் நிலைய பகுதியில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக மின்தடை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தூத்துக்குடி நகர் விநியோக செயற்பொறியாளர் எல்.சின்னத்துரை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

தூத்துக்குடி மின்பகிர்மான வட்டம், அரசு துணை மின் நிலையத்தில் நாளை (30.7.2026, வியாழக்கிழமை) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளது.

காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை

இதன் காரணமாக மேலஅரசடி, கீழஅரசடி தருவைகுளம் மற்றும் தருவைகுளம் உப்பளப் பகுதிகள் பட்டினமருதூர் மற்றும் பட்டினமருதூர் உப்பளப் பகுதிகள் சில்லாநத்தம் வாலசமுத்திரம் கிழக்குக் கடற்கரை சாலை, புதூர்பாண்டியாபுரம், எட்டையாபுரம் ரோடு வடபுறம் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படும்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com