பெண்ணுக்கு காலை மிரட்டல்

வடமதுரை அருகே பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
பெண்ணுக்கு காலை மிரட்டல்
Published on

வடமதுரை அருகே உள்ள பாடியூர் கோட்டைமேட்டு தெருவை சேர்ந்தவர் தீபா (வயது 42). இவரது உறவினர் செல்வம் (60). இவர்கள் இருவருக்கும் இடையே சொத்து பிரச்சினை இருந்து வந்தது. இது தொடர்பான வழக்கு வேடசந்தூர் கோர்ட்டில் நடந்து வருகிறது. இந்தநிலையில் சம்பவத்தன்று தீபா வீட்டில் இருந்தபோது அங்கு வந்த செல்வம் அவரிடம் தகராறு செய்தார். மேலும் செல்வம், தீபாவை தகாத வார்த்தைகளால் பேசியதுடன், கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து தீபா வடமதுரை போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் செல்வம் மீது வடமதுரை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com