குழந்தையுடன் தாய் மாயம்

குழந்தையுடன் தாய் மாயம் ஆனார்.
குழந்தையுடன் தாய் மாயம்
Published on

 தோகைமலை அருகே உள்ள ரெங்கநாதபுரம் பகுதியை சேர்ந்தவர் சீரங்கன் (வயது 37). இவரது மனைவி பாக்கியலட்சுமி. இந்த தம்பதிக்கு லிவிக்கா என்ற 9 மாத கைக்குழந்தை உள்ளது. இந்தநிலையில் கடந்த 5-ந்தேதி பாக்கியலட்சுமி தனது கைக்குழந்தையுடன் வீட்டில் இருந்து வெளியே சென்றார். ஆனால் மாலை வெகுநேரம் ஆகியும் அவர் வீட்டிற்கு திரும்பி வரவில்லை. இதையடுத்து தாயையும், குழந்தையும் உறவினர்கள் வீடு உள்பட பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து சீரங்கன் கொடுத்த கொடுத்த புகாரின்பேரில், தோகைமலை போலீசார் வழக்குப்பதிந்து மாயமான குழந்தை மற்றும் தாயையும் தேடி வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com