மொபட் மீது மோட்டார் சைக்கிள் மோதல்; ஒருவர் பலி

மொபட் மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் ஒருவர் உயிரிழந்தார்.
மொபட் மீது மோட்டார் சைக்கிள் மோதல்; ஒருவர் பலி
Published on

புதுக்கோட்டை மேட்டுப்பட்டியை சோந்தவர் சசி (வயது 43). இவர் சம்பவத்தன்று மொபட்டில் திருமலையார்புரத்தில் இருந்து மேட்டுப்பட்டி நோக்கி சென்றார். அப்போது மேட்டுப்பட்டியில் வந்த மோட்டார் சைக்கிள், மொபட் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட சசி படுகாயமடைந்தார். இதையடுத்து சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், அங்கு பரிதாபமாக இறந்தார். இது குறித்து கணேஷ்நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com