சட்டத்தை மீறி சிறுவன் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் பறிமுதல்: ரூ.25 ஆயிரம் அபராதம்

தூத்துக்குடியில் சட்டத்தை மீறி சிறுவன் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்த போக்குவரத்து போலீசார் ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்து, சிறுவனின் பெற்றோர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
சட்டத்தை மீறி சிறுவன் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் பறிமுதல்: ரூ.25 ஆயிரம் அபராதம்
Published on

தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. ஆல்பர்ட் ஜான் உத்தரவின்படி, தூத்துக்குடி நகர உட்கோட்ட ஏ.எஸ்.பி. மதன் மேற்பார்வையில், போக்குவரத்து இன்ஸ்பெக்டர் மயிலேறும் பெருமாள் தலைமையில் போக்குவரத்து போலீசார் நேற்று முன்தினம் (21.03.2025) தூத்துக்குடி, மேலசண்முகபுரம் பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டபோது தூத்துக்குடியைச் சேர்ந்த சிறுவன் ஒருவன் மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்துள்ளார். இதனையடுத்து அந்த சிறுவனின் இருசக்கர வாகனத்தை போக்குவரத்து பிரிவு போலீசார் பறிமுதல் செய்து, தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். மேலும் மோட்டார் வாகன சட்டத்தை மீறி சிறுவனுக்கு மோட்டார் சைக்கிளை ஓட்ட அனுமதித்த சிறுவனின் தந்தை மீது தென்பாகம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்து, ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்தும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com