வாகன ஓட்டிகள் அதிர்ச்சி... பெட்ரோல், டீசல் விலையை உயர்த்திய தனியார் நிறுவனம்

நாட்டில் போதுமான அளவு பெட்ரோல்-டீசல் இருப்பு உள்ளது என்று பெட்ரோலிய அமைச்சகம் தெரிவித்துள்ளது.
வாகன ஓட்டிகள் அதிர்ச்சி... பெட்ரோல், டீசல் விலையை உயர்த்திய தனியார் நிறுவனம்
Published on

சென்னை,

வளைகுடா பிராந்தியத்தில் நடந்து வரும் போரால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் தொடர்ந்து விலை அதிகரிக்கிறது. சமையல் கியாஸ் சிலிண்டருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ள நிலையில், பெட்ரோல், டீசலுக்கும் அந்த நிலை வரலாம் என மக்கள் மத்தியில் பதற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது. ஆனால் இந்த விவகாரத்தில் எந்தவித பதற்றமும் வேண்டாம் என மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.

இது தொடர்பாக பெட்ரோலிய அமைச்சகம் கூறுகையில், 'அனைத்து சுத்திகரிப்பு நிலையங்களும் போதுமான கச்சா எண்ணெயுடன் இயங்கி வருகின்றன. நாட்டில் போதுமான அளவு பெட்ரோல்-டீசல் இருப்பு உள்ளது. எந்தவித தட்டுப்பாடும் இல்லை. நாடு முழுவதும் சில்லறை விற்பனை நிலையங்கள் இயல்பாக இயங்கி வருகின்றன. எனவே வதந்திகளை நம்பி சில பகுதிகளில் மக்கள் அவசரப்பட்டு பெட்ரோல், டீசல் வாங்க வேண்டாம் என தெரிவித்தது.

இந்த நிலையில், பெட்ரோல் மற்றும் டீசல் விலையை ‘நயாரா’(தனியார்) பெட்ரோல் நிறுவனம் உயர்த்தியுள்ளது. அதன்படி, பெட்ரோல் விலை லிட்டருக்கு 5 ரூபாய் உயர்ந்து, ஒரு லிட்டர் ரூ.107.93-க்கும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.3 உயர்ந்து ஒரு லிட்டர் ரூ.97.22-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. நாடு முழுவதும் மொத்தம் 7,000 நயாரா பெட்ரோல் பங்குகள் செயல்பட்டு வருகின்றன.

கடலூரில் நயாரா பெட்ரோல் விலை ரூ.5.30 உயர்ந்து ஒரு லிட்டர் ரூ.107.93க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதே போல டீசல் விலை லிட்டருக்கு ரூ.3 உயர்ந்து ஒரு லிட்டர் ரூ.97.22க்கு விற்பனை செய்யப்படுகின்றது. இது வாகன ஓட்டிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com