திருப்புவனம் அருகே முளைப்பாரி ஊர்வலம்

திருப்புவனம் அருகே உள்ள அழகுநாச்சியம்மன் கோவிலில் முளைப்பாரி ஊர்வலம் நடைபெற்றது.
திருப்புவனம் அருகே முளைப்பாரி ஊர்வலம்
Published on

திருப்புவனம் அருகே பழையனூரில் உள்ள அழகுநாச்சியம்மன் கோவிலில் முளைப்பாரி திருவிழா நடைபெற்றது. விழா கடந்த 26-ந் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. தொடர்ந்து தினசரி அம்மனுக்கும், கிராம பரிவார தெய்வங்களுக்கும் சிறப்பு அபிஷேகம், தீபாராதனைகள் நடைபெற்றது. நேற்று முன்தினம் முளைப்பாரியை மந்தையம்மன் கோவிலுக்கு எடுத்து சென்றனர். இதையடுத்து முளைப்பாரி ஊர்வல திருவிழா நேற்று மாலை நடைபெற்றது. விழாவில், மந்தையம்மன் கோவிலில் இருந்து முளைப்பாரியை பக்தர்கள் சுமந்து பல்வேறு கோவில்களின் வழியாகவும், முக்கிய வீதிகள் வழியாகவும் வந்தனர். பின்னர் பரிபூரண விநாயகர் கோவில் முன்பு முளைப்பாரி இறக்கி வைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு கோவில் அருகே உள்ள அய்யா ஊருணியில் கரைக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். 

X

Daily Thanthi
www.dailythanthi.com