ஏரியில் மூழ்கி மாநகராட்சி ஊழியர் பலி

சென்னை பள்ளிக்கரணை அணை ஏரியில் மூழ்கி மாநகராட்சி ஊழியர் பலியானார்.
ஏரியில் மூழ்கி மாநகராட்சி ஊழியர் பலி
Published on

சென்னையை அடுத்த பள்ளிக்கரணை நாராயணபுரம் பகுதியை சேர்ந்தவர் கவுதம் (வயது 29). இவர், சென்னை மாநகராட்சியில் ஒப்பந்த ஊழியராக பள்ளிக்கரணையில் பணியாற்றி வந்தார்.

நேற்று மாலை பணி முடிந்ததும், உடன் பணிபுரியும் நண்பர்களுடன் சேர்ந்து மது வாங்கி கொண்டு பள்ளிக்கரணை அணை ஏரிக்கு சென்றனர். அங்கு அனைவரும் மது குடித்தனர். பின்னர் கவுதம் மட்டும் தனியாக ஏரியில் இறங்கி குளித்தார்.

அப்போது திடீரென தண்ணீரில் மூழ்கினார். இதனால் அதிர்ச்சி அடைந்த சக ஊழியர்கள், பள்ளிக்கரணை போலீசார் மற்றும் தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் மற்றும் வேளச்சேரி தீயணைப்பு நிலைய வீரர்கள், ஏரியில் மூழ்கிய கவுதமை நீண்ட நேர தேடுதலுக்கு பிறகு பிணமாக மீட்டனர். இது குறித்து பள்ளிக்கரணை போலீசார் வழக்குப்பதிவு விசாரணை செய்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com