முத்துமாரியம்மன் கோவில் குடமுழுக்கு

புளியஞ்சேரி முத்துமாரியம்மன் கோவில் குடமுழுக்கு நடந்தது.
முத்துமாரியம்மன் கோவில் குடமுழுக்கு
Published on

கபிஸ்தலம்:

சுவாமிமலை அருகே உள்ள பாபுராஜபுரம் ஊராட்சி புளியஞ்சேரி வடக்கு தெருவில் உள்ள முத்துமாரியம்மன் கோவில் குடமுழுக்கு நடந்தது. முன்னதாக கடந்த 24-ந் தேதி முதல் யாகசாலை பூஜை, கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், லட்சுமி ஹோமம், வாஸ்து சாந்தி, யாகசாலை பூஜைகள் தொடங்கியது. தொடர்ந்து நேற்று 2-ம் கால யாகசாலை பூஜை, மகா பூர்ணாகுதியுடன் மங்கள ஆர்த்தி செய்யப்பட்டு கடங்கள் புறப்பாடாகி கோவில் கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு குடமுழுக்கு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com