மர்ம காய்ச்சல் எதிரொலி: கடலூர் அரசு மருத்துவமனையில் குவிந்து வரும் நோயாளிகளின் கூட்டம்

மர்ம காய்ச்சல் எதிரொலியால் கடலூர் அரசு மருத்துவமனையில் நோயாளிகளின் கூட்டம் குவிந்து காணப்படுகிறது.
மர்ம காய்ச்சல் எதிரொலி: கடலூர் அரசு மருத்துவமனையில் குவிந்து வரும் நோயாளிகளின் கூட்டம்
Published on

கடலூர்,

கடலூர் மாவட்டத்தில் கோடை காலத்தை மிஞ்சும் வகையில் தற்போது வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. இதற்கிடையே வெப்பச்சலனம் காரணமாக மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் பரவலாக மழை பெய்து வருகிறது.

இந்நிலையில் பருவநிலை மாற்றத்தால் கடலூர் மாவட்டத்தில் மர்ம காய்ச்சல் பரவி வருவதாக கூறப்படுகிறது. இதனால் கடலூர் அரசு மருத்துவமனையில் நோயாளிகளின் கூட்டம் குவிந்து காணப்படுகிறது.

இதனைத்தொடர்ந்து கடலூர் அரசு மருத்துவமனையில் நோயாளிகள் நீண்ட வரிசையில் காத்திருக்கும் சூழல் நிலவுகிறது. இன்று காலை மட்டும் 1000க்கும் மேற்பட்டோர் காய்ச்சல் பாதிப்புக்கு சிகிச்சை எடுத்துக் கொண்டனர். இதனிடையே கடலூர் அரசு மருத்துவமனையில் போதிய இடவசதி இல்லாததால் கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com