பெண்ணிடம் கவரிங் சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபர்கள்

பெண்ணிடம் கவரிங் சங்கிலியை மர்ம நபர்கள் பறித்து சென்றனர்.
பெண்ணிடம் கவரிங் சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபர்கள்
Published on

கே.கே.நகர்:

திருச்சி கே.கே.நகர் பகுதியைச் சேர்ந்தவர் நாகபூஷணம்(வயது 46). இவர் தனது வீட்டில் துணி துவைத்துக் கொண்டிருந்தார். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த 2 பேர், அவரிடம் 'எங்களது மாட்டை காணவில்லை, இந்த பக்கம் வந்ததா? என்று கேட்டுள்ளனர். அப்போது திடீரென நாகபூஷணத்தின் கழுத்தில் கிடந்த சங்கிலியை தங்கம் என்று நினைத்து, அவர்கள் பறித்து சென்றனர். ஆனால் அது கவரிங் சங்கிலி என்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து கே.கே.நகர் போலீசார் வழக்குப்பதிந்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com