மாயமான இளம்பெண் கோவையில் மீட்பு

மாயமான இளம்பெண் கோவையில் மீட்கப்பட்டார்.
மாயமான இளம்பெண் கோவையில் மீட்பு
Published on

ஆலங்குடி அருகே உள்ள கொத்தக்கோட்டை ஊராட்சியை சேர்ந்த கல்யாணிபுரம் கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணன். இவருடைய மகள் பிரியங்கா. இவர் டிப்ளமோ நர்சிங் படித்துள்ளார். இந்தநிலையில் வீட்டில் சரிவர வேலை செய்யாததால் அவரது தாயார் வீரம்மாள் திட்டியுள்ளார். இதில் பிரியங்கா கோபித்துக்கொண்டு வீட்டைவிட்டு வெளியே சென்றார். இதுகுறித்து அவரது பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் ஆலங்குடி இன்ஸ்பெக்டர் அழகம்மை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். இதில், பிரியங்கா கோவையில் உள்ள ஒரு மருத்துவமனையில் பணியாற்றி வந்தது தெரியவந்தது. இதையடுத்து ஆலங்குடி போலீசார் பிரியங்காவை மீட்டு அவரது பெற்றோரிடம் ஒப்படைத்தனர். 

X

Daily Thanthi
www.dailythanthi.com