மாயமான இளம்பெண் குளத்தில் பிணமாக மீட்பு

பாதிரிவேடு அருகே மாயமான இளம்பெண் குளத்தில் பிணமாக மீட்கப்பட்டார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மாயமான இளம்பெண் குளத்தில் பிணமாக மீட்பு
Published on

கும்மிடிப்பூண்டி அடுத்த பாதிரிவேடு அருகே உள்ள குந்தெலிமேடு கிராமத்தை சேர்ந்த கூலித்தொழிலாளி ஆறுமுகம் என்பவரின் மனைவி உமா மகேஸ்வரி (வயது 26). இவர் தனது கணவருடன் எற்பட்ட குடும்ப தகராறு காரணமாக கடந்த 25-ந் தேதி வீட்டிலிருந்து காணாமல் போனதாக கூறப்படுகிறது. இது குறித்து பாதிரிவேடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில், நேற்று அதே பகுதியில் உள்ள குளத்தில் உமா மகேஸ்வரி பிணமாக மிதந்தார். தகவலறிந்து அங்கு சென்ற போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த வழக்கை சந்தேக வழக்காக மாற்றிய போலீசார் உமாமகேஸ்வரி தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com