நாகர்கோவில் - சார்லபள்ளி சிறப்பு ரெயில் நீட்டிப்பு

வருகிற 30-ந்தேதி முதல் நவம்பர் மாதம் 13-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது.
நாகர்கோவில் - சார்லபள்ளி சிறப்பு ரெயில் நீட்டிப்பு
Published on: 

நெல்லை,

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் அருகே உள்ள சார்லபள்ளியில் இருந்து சென்னை எழும்பூர், நெல்லை வழியாக நாகர்கோவிலுக்கு சிறப்பு ரெயில் (வண்டி எண் 07535) வாரத்தில் வெள்ளிக்கிழமைதோறும் இயக்கப்படுகிறது. இந்த மாதம் வரை மட்டுமே இயக்கப்படுவதாக இருந்த இந்த ரெயில் வருகிற 30-ந்தேதி முதல் நவம்பர் மாதம் 13-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது.

அதே போல் நாகர்கோவில் சார்லபள்ளி சிறப்பு ரெயில் (07536-ஞாயிற்றுக்கிழமை) வருகிற நவம்பர் மாதம் 1-ந்தேதி முதல் 15-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. இந்த தகவலை தெற்கு ரெயில்வே முதன்மை மக்கள் தொடர்பு அலுவலர் நரேன் தெரிவித்துள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com