

நாகர்கோவில்,
கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலில் வரிபாக்கி செலுத்தாததால் சினிமா தியேட்டரில் ரசிகர்களை வெளியேற்றி புரஜெக்டரை அதிகாரிகள் ஜப்தி செய்தனர்.
கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் ஒழுகினசேரி பகுதியில் உள்ள வள்ளி தியேட்டர் ரூ.14 லட்சம் வரி பாக்கி வைத்திருந்தது. அந்த தியேட்டருக்கு மாநகராட்சி அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பியும், இறுதிக்கட்ட எச்சரிக்கை விடுத்தும் வரிபாக்கியை கட்டவில்லை. எனவே பொருட்களை ஜப்தி செய்ய அதிகாரிகள் நேற்று காலையில் 11 மணி அளவில் தியேட்டருக்கு சென்றனர்.
அப்போது அங்கு நடிகர் சூர்யா நடித்த 'சீன்' படம் திரையிடப்பட்டிருந்தது. இதனை ரசிகர்கள் உற்சாகமாக பார்த்துக் கொண்டிருந்தனர். வேகமாக உள்ளே சென்ற அதிகாரிகள் படம் ஒளிபரப்பும் புரஜெக்டரை ஜப்தி செய்ததால் படம் ஒளிபரப்பு நிறுத்தப்பட்டது. இதனால் ரசிகர்கள் என்ன நடக்கிறது என்று தெரியாமல் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அவர்களுக்கு நடந்த விஷயத்தை தெரிவித்து வெளியேற்றினர். அவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.
இதேபோல அங்குள்ள ஞானதாசன் மாடரேட்டர் கல்லூரி நிர்வாகம் ரூ.32 லட்சத்து 50 ஆயிரம் வரை வரி பாக்கி வைத்திருந்ததால், கல்லூரி அலுவலகத்தில் இருந்த மேஜை, நாற்காலிகள் மற்றும் கம்ப்யூட்டர்களை பறிமுதல் செய்தனர்.