

சென்னை,
நாகர்கோவிலில் இருந்து வரும் 20-ந்தேதி கச்சிக்குடா செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் காலை 9.25 மணிக்கு புறப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது, இந்த ரெயில் புறப்படும் நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக, தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:-
நாகர்கோவில் - கச்சிக்குடா எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண் 16354) வரும் 20-ந்தேதி, நாகர்கோவிலில் இருந்து காலை 9.25 மணிக்கு புறப்படுவதற்கு பதிலாக, 2 மணி 55 நிமிடங்கள் தாமதமாக மதியம் 12.20 மணிக்கு புறப்பட்டு செல்லும்.
அந்த ரெயிலில் செல்லும் பயணிகள் அதற்கு ஏற்ற வகையில் தங்களின் திட்டங்களை மாற்றிக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.