

சென்னை,
நாகர்கோவில்-கோட்டயம் இடையே வரும் அக்டோபர் 6 ஆம் தேதி முதல் சிறப்பு ரெயில் இயக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது;-
* நாகர்கோவில்-கோட்டயம் (வண்டி எண்: 06366) இடையே தினசரி சிறப்பு ரெயில் வருகிற அக்டோபர் மாதம் 6-ந்தேதி முதல் மதியம் 1 மணிக்கு நாகர்கோவில் ரெயில் நிலையத்தில் இருந்து இயக்கப்படும்.
* கோட்டயம்-நிலாம்பூர் ரோடு (06326) இடையே சிறப்பு ரெயில் வருகிற 7-ந்தேதி முதல் தினசரி அதிகாலை 5.15 மணிக்கு கோட்டயம் ரெயில் நிலையத்தில் இருந்து புறப்படும்.
மறுமார்க்கமாக நிலாம்பூர் ரோடு-கோட்டயம் (06325) இடையே சிறப்பு ரெயில் வருகிற 7-ந்தேதி முதல் தினசரி மதியம் 3.15 மணிக்கு நிலாம்பூர் ரோடு ரெயில் நிலையத்தில் இருந்து இயக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.