நாகர்கோவில்: மருந்து கடையின் பூட்டை உடைத்து ரூ.1 லட்சம் கொள்ளை- மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

நாகர்கோவில் எஸ்.பி. அலுவலக சாலை, தெற்கு தெருவில் நாகர்கோவிலைச் சேர்ந்த ஒருவர் 9 வருடங்களாக மருந்து கடை நடத்தி வருகிறார்.
நாகர்கோவில்: மருந்து கடையின் பூட்டை உடைத்து ரூ.1 லட்சம் கொள்ளை- மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
Published on

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில், சைமன் நகரைச் சேர்ந்த கலாதாரன் (வயது 53) என்பவர், நாகர்கோவில் எஸ்.பி. அலுவலக சாலை, தெற்கு தெருவில் 9-வருடங்களாக மருந்து கடை நடத்தி வருகிறார். நேற்று இரவு 8 மணிக்கு கடையைப் பூட்டிவிட்டுச் சென்றுள்ளார். மறுநாள் காலை 9 மணிக்குத் திறக்க வந்தபோது, கடையின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது.

உள்ளே சென்று பார்த்தபோது, மேஜை டிராயரில் இருந்த ரூ.1 லட்சத்து 5 ஆயிரம் பணத்தை காணவில்லை. இரவு நேரத்தில் மர்ம நபர்கள் கடையில் பூட்டை உடைத்து கொள்ளையடித்துச் சென்றிருக்கலாம் என கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின்பேரில் வடசேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கெண்டு, இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். எஸ்.பி. அலுவலகம் அருகே நடந்த இந்த கொள்ளைச் சம்பவம் நாகர்கோவிலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com