நாகர்கோவில்-சாலிமார் எக்ஸ்பிரஸ் ரெயில் ரத்து


நாகர்கோவில்-சாலிமார் எக்ஸ்பிரஸ் ரெயில் ரத்து
x

கோப்புப்படம்

பராமரிப்பு பணி காரணமாக, நாகர்கோவில்-சாலிமார் எக்ஸ்பிரஸ் ரெயில் ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

சாலிமார் ரெயில் நிலையத்தில் மேற்கொள்ளப்பட உள்ள பராமரிப்பு பணி காரணமாக, நாகர்கோவிலில் இருந்து மதியம் 2.45 மணிக்கு புறப்பட்டு பீகார் மாநிலம் சாலிமார் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்.12659), வரும் நவம்பர் 16-ந்தேதி ரத்து செய்யப்படுகிறது. மறுமார்க்கமாக, சாலிமாரில் இருந்து இரவு 11.45 மணிக்கு புறப்பட்டு நாகர்கோவில் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் (12660), வரும் நவம்பர் 19-ந்தேதி ரத்து செய்யப்படுகிறது.

சென்னை சென்டிரலில் இருந்து வரும் அக்டோபர் 29, நவம்பர் 12,19 ஆகிய தேதிகளில் இரவு 7.50 மணிக்கு புறப்பட்டு சாலிமார் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் (22826), சந்திரகாச்சி-சாலிமார் இடையே பகுதி நேர ரத்து செய்யப்பட்டு, சாலிமாரில் நிறுத்தப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

1 More update

Next Story