

சென்னை,
தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது;-
பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் 12 ஆண்டுகால சிறப்புமிக்க, மக்கள் நலன் சார்ந்த மற்றும் வரலாற்றுச் சாதனைகள் நிறைந்த ஆட்சிப் பயணத்தைப் போற்றும் வகையில், சென்னை தியாகராய நகரில் அமைந்துள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வர சுவாமி திருக்கோவிலில், பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயலாளரும் தமிழக பாஜக மேலிடப் பொறுப்பாளருமான அரவிந்த் மேனனுடன் இணைந்து சிறப்பு தரிசனம் மேற்கொண்டோம்.
அந்த புனித தருணத்தில், ஸ்ரீ வெங்கடேஸ்வர சுவாமியின் திருவடிகளில் பிரதமர் நரேந்திர மோடி நீண்ட ஆயுள், நிறைவான ஆரோக்கியம் மற்றும் தீராத ஆற்றலுடன் தொடர்ந்து நாட்டின் முன்னேற்றத்திற்கும், 140 கோடி இந்திய மக்களின் நலனுக்காகவும் அர்ப்பணிப்புடன் சேவை செய்ய இறையருள் புரிய வேண்டி மனமாரப் பிரார்த்தனை செய்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கினோம்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.