முருகனுடன் நளினி சந்திப்பு

20-வது நாளாக உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ள முருகனுடன் நளினி சந்தித்தார்.
முருகனுடன் நளினி சந்திப்பு
Published on

வேலூர்

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட முருகன் வேலூர் ஆண்கள் ஜெயிலிலும், அவரது மனைவி நளினி பெண்கள் ஜெயிலிலும் தண்டனை அனுபவித்து வருகின்றனர். முருகன் 6 நாட்கள் பரோல் கேட்டு ஜெயிலில் வழங்கப்படும் உணவுகளை தவிர்த்து 20-வது நாளாக உண்ணாவிரதம் மேற்கொண்டார். பரோலில் வெளியே வந்துள்ள நளினி காட்பாடி பிரம்மபுரத்தில் தங்கி உள்ளார்.

இவர்கள் இருவரும் 15 நாட்களுக்கு ஒருமுறை சந்தித்து பேச அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி நேற்று காட்பாடியில் இருந்து நளினி பலத்த போலீஸ் காவலுடன் வேலூர் ஜெயிலுக்கு அழைத்து வரப்பட்டார். அங்கு அவர் காலை 11 மணி முதல் 11.30 மணி வரை முருகனை சந்தித்து பேசினார். அப்போது, முருகனின் உண்ணாவிரதம், விடுதலை தொடர்பாக பேசிக்கொண்டதாக தெரிகிறது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com