நாட்டுமட மாரியம்மன் வெள்ளி ரிஷப வாகனத்தில் வீதி உலா

புரட்டாசி பெருவிழாவையொட்டி நாட்டுமட மாரியம்மன் வெள்ளி ரிஷப வாகனத்தில் வீதி உலா நடந்தது.
நாட்டுமட மாரியம்மன் வெள்ளி ரிஷப வாகனத்தில் வீதி உலா
Published on

வேதாரண்யம்:

நாட்டுமட மாரியம்மன் கோவிலில் புரட்டாசி பெருவிழா காப்பு கட்டும் நிகழ்ச்சியுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. 8-ம் நாள் திருவிழாவில் பக்தர்கள் ஊர்வலமாக பால்குடம் எடுத்து வந்து அம்மனுக்கு பல்வேறு திரவியங்கள், பால்.தயிர், பஞ்சாமிர்தம், பன்னீர், இளநீர் உள்ளிட்டவைகளால் அபிஷேகம் செய்யப்பட்டது.பின்னர் சந்தனகாப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து வெள்ளி ரிஷப வாகனத்தில் அம்மன் வீதி உலா காட்சி நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com