தூத்துக்குடி எஸ்.பி. அலுவலகத்தில் தேசிய வாக்காளர் தின உறுதிமொழி ஏற்பு

ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 25ம் தேதியன்று தேசிய வாக்காளர் தினம் கொண்டாடப்படுகிறது.
தூத்துக்குடி எஸ்.பி. அலுவலகத்தில் தேசிய வாக்காளர் தின உறுதிமொழி ஏற்பு
Published on

ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 25ம் தேதியன்று தேசிய வாக்காளர் தினம் கொண்டாடப்படுகிறது. அதனை முன்னிட்டு இன்று (23.01.2026) தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தில் எஸ்.பி. சிலம்பரசன் தலைமையில் காவல்துறை அதிகாரிகள் மற்றும் அமைச்சுப் பணி அதிகாரிகள், காவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டு பின்வருமாறு வாக்காளர் உறுதிமொழி ஏற்றனர்.

"மக்களாட்சியின் மீது பற்றுடைய இந்தியக் குடிமக்களாகிய நாம், நம்முடைய நலன் கருதும் மரபுகளையும், சுதந்திரமான நியாயமான மற்றும் அமைதியான தேர்தல்களின் மாண்பையும் நிலைநிறுத்துவோம் என்றும், மேலும் ஒவ்வொரு தேர்தலிலும் அச்சமின்றியும், மதம், இனம், சாதி, வகுப்பு, மொழி ஆகியவற்றின் தாக்கங்களுக்கு ஆட்படாமலும் அல்லது எந்தவொரு தூண்டுதலுமின்றியும் வாக்களிப்போம் என்றும் உறுதி மொழிகிறோம் என்று கூறி அவர்கள் அனைவரும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். 

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com