வீடுகளுக்கு குழாய் மூலம் இயற்கை எரிவாயு - மத்திய அரசு அனுமதி


வீடுகளுக்கு குழாய் மூலம் இயற்கை எரிவாயு - மத்திய அரசு அனுமதி
x
தினத்தந்தி 18 April 2025 5:10 PM IST (Updated: 18 April 2025 5:52 PM IST)
t-max-icont-min-icon

இந்த திட்டத்தை செயல்படுத்த டோரண்ட் கேஸ் நிறுவனத்திற்கு தமிழ்நாடு கடற்கரை ஒழுங்குமுறை மேலாண்மை ஆணையம் அனுமதி அளித்துள்ளது.

சென்னை


சுற்றுச்சூழலை பாதுகாக்கவும், இறக்குமதி செலவை குறைப்பதற்காகவும், இயற்கை எரிவாயு பயன்பாட்டை அதிகரிக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இந்நிலையில் சென்னையில் குழாய் மூலம் வீடுகளுக்கு இயற்கை எரிவாயு வழங்கும் திட்டத்திற்கு மத்திய சுற்றுச்சூழல், மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது.

இதன்படி சென்னையில் நீலாங்கரை, அடையாறு, திருவான்மியூர், சேப்பாக்கம், ராயபுரம், பாரிமுனை, தண்டயார்பேட்டை, திருவொற்றியூர், எண்ணூர் உள்ளிட்ட பகுதிகளில் டோரண்ட் கேஸ் (TORRENT GAS) நிறுவனத்தால் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

மொத்தம் 466 கி.மீ நீளத்திற்கு குழாய் அமைக்கப்பட உள்ளது. இதில் 260 கி.மீ கடலோர மண்டல ஒழுங்குமுறை ஆணைய பகுதிகளில் வருகிறது. இதன்படி 48 கோடி செலவில் இந்த திட்டத்தை செயல்படுத்த டோரண்ட் கேஸ் நிறுவனத்திற்கு தமிழ்நாடு கடற்கரை ஒழுங்குமுறை மேலாண்மை ஆணையம் அனுமதி அளித்துள்ளது.

1 More update

Next Story