வண்டுவாஞ்சேரி வண்டுறைமாரியம்மன் கோவிலில் நவராத்திரி கொலு

வாய்மேடு அருகே வண்டுவாஞ்சேரி வண்டுறைமாரியம்மன் கோவிலில் நவராத்திரி கொலு
வண்டுவாஞ்சேரி வண்டுறைமாரியம்மன் கோவிலில் நவராத்திரி கொலு
Published on

வாய்மேடு:

வாய்மேட்டை அருகே வண்டுவாஞ்சேரி வண்டுறை மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் 3-ம் நாள் நவராத்திரி விழா நடந்தது. முன்னதாக மாரியம்மனுக்கு பால், பன்னீர், இளநீர், சந்தனம், நெய், தேன் உள்ளிட்டவைகளால் அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் வண்ணமலர்களால் மாரியம்மன் அலங்கரிக்கப்பட்டு, மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு மாரியம்மனை வழிபட்டனர். கோவிலின் மண்டபத்தில் நவராத்திரி விழாவை முன்னிட்டு கொலு பொம்மைகள் வைக்கப்பட்டிருந்தன. 

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com