கோபி அருகே விஷம் குடித்து முதியவர் தற்கொலை

கோபி அருகே விஷம் குடித்து முதியவர் தற்கொலை செய்துகொண்டா
கோபி அருகே விஷம் குடித்து முதியவர் தற்கொலை
Published on

கோபி அருகே உள்ள பொலவக்காளிபாளையத்தை சேர்ந்தவர் சின்னான் (வயது 78). கூலித்தாழிலாளி. இவர் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் சின்னான் மனமுடைந்து விஷம் குடித்து வீட்டில் மயங்கி விழுந்தார். உடனே அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கோபி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று முன்தினம் உயிரிழந்தார். இதுகுறித்து கோபி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com