குளச்சல் அருகேடெம்போ டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை

குளச்சல் அருகே டெம்போ டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை
குளச்சல் அருகேடெம்போ டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை
Published on

குளச்சல், 

குளச்சல் அருகே அஞ்சாலி பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ். இவருடைய மகன் ஸ்டான்லி (வயது 42). டெம்போ ஓட்டி வந்த இவர் பிறகு கூலி வேலைக்கு சென்று வந்தார். திருமணமாகவில்லை.

கடந்த சில நாட்களாக இவர் மனமுடைந்த நிலையில் இருந்துள்ளார். இந்தநிலையில் நேற்றுமுன்தினம் ஸ்டான்லி வீட்டு உத்திரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்த புகாரின் பேரில் குளச்சல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com