நம்பியூர் அருகே மாயமான தொழிலாளி வாய்க்காலில் பிணமாக மீட்பு

நம்பியூர் அருகே மாயமான தொழிலாளி வாய்க்காலில் பிணமாக மீட்கப்பட்டா.
நம்பியூர் அருகே மாயமான தொழிலாளி வாய்க்காலில் பிணமாக மீட்பு
Published on

நம்பியூர்

நம்பியூர் அருகே உள்ள வெள்ளாளபாளையம் காமாட்சி அம்மன் கோவில் வீதியைச் சேர்ந்தவர் பெருமாள் (வயது 65). சலவை தொழிலாளி. இவருடைய மகன் ராமச்சந்திரன். இந்தநிலையில் தன்னுடைய தந்தையை 6 நாட்களாக காணவில்லை என்றும், அவரை கண்டு பிடித்து தரவேண்டும் என்றும் ராமச்சந்திரன் வரப்பாளையம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான பெருமாளை தேடி வந்தனர். இந்தநிலையில் நேற்று காலை கோபி அருகே உள்ள செம்மாண்டம்பாளையம் சின்னப்பாலம் என்ற இடத்தில் செல்லும் கீழ்பவானி வாய்க்காலில் பெருமாள் பிணமாக மிதந்தார். இதுகுறித்து தகவல் கிடைத்ததும் வரப்பாளையம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோபி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து பெருமாள் வாய்க்காலில் குதித்து தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com