தேனி அருகேதொழில்நெறி வழிகாட்டும் கண்காட்சி

தேனி அருகே தொழில்நெறி வழிகாட்டும் கண்காட்சி நடைபெற்றது.
தேனி அருகேதொழில்நெறி வழிகாட்டும் கண்காட்சி
Published on

தேனி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில், தேனி அருகே கொடுவிலார்பட்டியில் உள்ள கம்மவார் சங்க கல்லூரி வளாகத்தில் தொழில்நெறி வழிகாட்டும் கண்காட்சி மற்றும் கருத்தரங்கு நடந்தது. மாவட்ட கலெக்டர் முரளிதரன் தலைமை தாங்கி கண்காட்சியை திறந்து வைத்து பார்வையிட்டார். பின்னர் கருத்தரங்கில் அவர் பேசினார். கட்டுரைப்போட்டியில் பங்கேற்று முதல் 3 இடங்களை பிடித்தவர்களுக்கு கலெக்டர் பரிசு வழங்கி பாராட்டினார். இதில், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் நாராயணமூர்த்தி, போலீஸ் துணை சூப்பிரண்டு பார்த்திபன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com