தேனி அருகேவேலை வாங்கி தருவதாக ரூ.5 லட்சம் மோசடி 3 பேர் மீது வழக்கு

தேனி அருகே வேலை வாங்கி தருவதாக மோசடி செய்த 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
தேனி அருகேவேலை வாங்கி தருவதாக ரூ.5 லட்சம் மோசடி 3 பேர் மீது வழக்கு
Published on

தேனி அருகே உள்ள பூதிப்புரம் காமாட்சி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கருப்பசாமி (வயது 43). எலக்ட்சியன். இவர், பழனிசெட்டிபட்டி போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் கொடுத்தார். அதில், பழனிசெட்டிபட்டியை சேர்ந்த இருளன் (43), புலிகுத்தியை சேர்ந்த செல்வம், அப்பிபட்டியை சேர்ந்த ஜெயக்குமார் (53) ஆகிய 3 பேர் எனக்கு அறிமுகமானார்கள். அவர்கள் நான் வேலையில்லாமல் இருந்ததை அறிந்து எனக்கு அரசு வேலை வாங்கி தருவதாக கூறினர். இதற்காக ரூ.5 லட்சம் மற்றும் கல்வி சான்றிதழ்களை வாங்கி கொண்டனர். ஆனால் வேலை வாங்கி தராமல் ஏமாற்றி வந்தனர். பணத்தை திருப்பி கேட்டால் கொலை மிரட்டல் விடுகின்றனர். எனவே வேலை வாங்கி தராமல் மோசடி செய்த 3 பேர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார். அதன்பேரில் போலீசார் இருளன், செல்வம் உள்பட 3 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com