உத்தமபாளையம் அருகேமாட்டார்சைக்கிள் விபத்தில் வியாபாரி பலி

உத்தமபாளையம் அருகே மோட்டார்சைக்கிள் விபத்தில் வியாபாரி பலியானார்.
உத்தமபாளையம் அருகேமாட்டார்சைக்கிள் விபத்தில் வியாபாரி பலி
Published on

உத்தமபாளையம் அருகே உள்ள உ.அம்மாபட்டி காலனி தெருவை சேர்ந்தவர் அழகர் (வயது 34). தேங்காய் வியாபாரி. நேற்று இவர், உ.அம்மாபட்டியில் இருந்து மோட்டார்சைக்கிளில் திருச்சிக்கு சென்று கொண்டிருந்தார். புதூர் அருகே வந்த போது கட்டுப்பாட்டை இழந்த மோட்டார்சைக்கிள் சாலையோரம் இருந்த பாலத்தில் மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அழகர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். தகவல் அறிந்த உத்தமபாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் அழகரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக உத்தமபாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com