விளாத்திகுளம் அருகே சிலம்பம் போட்டியில் சாதனை படைத்த மாணவிக்கு பரிசு

விளாத்திகுளம் அருகே சிலம்பம் போட்டியில் சாதனை படைத்த மாணவிக்கு மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. பரிசு அளித்தார்.
விளாத்திகுளம் அருகே சிலம்பம் போட்டியில் சாதனை படைத்த மாணவிக்கு பரிசு
Published on

எட்டயபுரம்:

விளாத்திகுளம் அருகே உள்ள நாகலாபுரம் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் எலக்ட்ரீசியன் இரண்டாம் ஆண்டு பயிலும் மாணவி சசிகலா, சென்னை நேரு விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற சிலம்பம் போட்டியில் மாநில அளவில் இரண்டாம் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். சாதனை மாணவி சசிகலாவை, மார்கண்டேயன் எம்.எல்.ஏ. நேரில் அழைத்து பாராட்டி கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, ஊக்கத்தொகை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. இளைஞர் அணி துணை அமைப்பாளர் இம்மானுவேல் உள்பட கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com