

சென்னை,
இளநிலை மருத்துவ படிப்பில் சேர்வதற்கு நீட் தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும். நாடு முழுவதும் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில் படிப்பதற்கு மாணவ, மாணவிகள் இடையே ஒவ்வொரு ஆண்டும் கடுமையான போட்டி நிலவில் வருகிறது.
இந்த வருடம் சுமார் 22 லட்சம் மாணவர்கள் நீட் தேர்வு எழுதினார்கள். அதிக மதிப்பெண் பெறக் கூடியவர்களுக்கு மட்டுமே மருத்துவ கல்லூரிகளில் இடம் கிடைக்கக்கூடிய வாய்ப்பு உள்ளது.
கடந்த ஆண்டு வரை நீட் தேர்வில் தகுதி மதிப்பெண் எஸ்.சி,ஓ.பி.சி. பிரிவினருக்கு 113 மதிப்பெண்ணாக இருந்தது. அது தற்போது வெளியாகி உள்ள நீட் மறுதேர்வில் 177 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதே போல ஒ.சி பிரிவினருக்கு தகுதி மதிப்பெண் 144 ஆக இதுவரையில் இருந்தது. அவை தற்போது 213 ஆக உயர்ந்துள்ளது. இதனால் - குறைந்த மதிப் பெண் எடுத்து தேர்ச்சி பெறக்கூடிய மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
நீட் தேர்வில் தேர்ச்சி என்ற சான்றிதழ் இருந்தால் மட்டுமே வெளிநாடுகளில் மருத்துவ படிப்பை படிக்க முடியும். இந்த ஆண்டு நீட் தகுதி மதிப்பெண் திடீரென உயர்த்தப்பட்டு இருப்பதால் மாணவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
நீட் தேர்வில் அதிக மதிப் பெண் பெற முடியாத மாணவர்கள் வெளிநாடுகளிலோ அல்லது நிகர் நிலை பல்கலைக்கழகங்களிலோ சேர்வது வழக்கம். அரசு மருத்துவக் கல்லூரியில் சேர்வதற்கான வாய்ப்பு இழந்த அந்த மாணவர்கள் ரஷியா, சீனா, பிலிப்பைன்ஸ், ஜார்ஜியா உள்ளிட்ட நாடு களில் மருத்துவ படிப்பில் சேர்வது வழக்கம். ஆனால் தற்போது நீட் தகுதி மதிப்பெண் உயர்த்தப்பட்டதால் வெளிநாடுகளில் சென்று மருத்துவப் படிப்பை தொடர முடியாமல் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து வெளிநாடுகளில் படித்த மருத்துவ மாணவர்கள் சங்கத் தலைவர் டாக்டர் ஏ.நஜுரூல்
அமீன் கூறியதாவது:-
நீட் தேர்வில் பல்வேறு குளறுபடிகள் இருந்து வந்த நிலையில் தற்போது அதன் தகுதிமாறா மதிப்பெண்ணையும் மத்திய அரசு உயர்த்தி உள்ளது. மருத்துவ கனவில் உள்ள மாணவர்கள் குறைந்த செலவில் வெளிநாடுகளுக்குச் சென்று படித்து வருகிறார்கள்.
இந்த தகுதி மதிப்பெண் உயர்த்தப்பட்டதன் மூலம் அவர்களின் மருத்துவ கனவு சிதறடிக்கப்படுகிறது. தமிழகத்தில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் சுமார் 5 ஆயிரம் மாணவர்கள் மருத்துவ படிப்புகளுக்கு வெளிநாடுகளுக்கு படிக்க சொல்கிறார்கள்.
ஏற்கனவே பல்வேறு சிரமங்களை சந்தித்து வரும் நீட் மாணவர்களுக்கு இந்த மதிப்பெண் உயர்வு மேலும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்திய மருத்துவ ஆணையம் இந்த முடிவை மறு பரிசீலனை செய்ய வேண்டும். தகுதி மதிப்பெண்ணை உயர்த்துவதன் மூலம் இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் இருந்து வெளிநாடுகளுக்கு செல்லக்கூடிய மாண வர்களின் கல்வி தடைப்பட்டுள்ளது. இதை உணர்ந்து மத்திய அரசு நீட் தகுதி மதிப் பெண்ணை குறைக்க வேண்டும். மாணவர்கள் வெளி நாட்டுகளில் படித்து விட்டு மீண்டும் இந்தியாவில் எப்.எம்.ஜி. தேர்வு எழுதும் முறை இருப்பதால் தகுதி மதிப்பெண்ணை குறைக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.