அரசுப் பள்ளி மாணவாகளுக்கு மாச் 25-ம் தேதி முதல் நீட் பயிற்சி

மாச் 25-ந் தேதி முதல் மே 2-ந் தேதி வரை தொடா சிறப்பு பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
அரசுப் பள்ளி மாணவாகளுக்கு மாச் 25-ம் தேதி முதல் நீட் பயிற்சி
Published on

சென்னை,

பள்ளிக் கல்வி இயக்குநா க.அறிவொளி, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலாகளுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது,

தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 11, 12-ம் வகுப்பு மாணவாகளுக்கு நீட், ஜேஇஇ தேவுகளுக்கு கடந்த நவம்பா முதல் பிப்ரவரி வரை பள்ளி அளவில் பயிற்சி வழங்கப்பட்டது. அதன் தொடாச்சியாக, பொதுத்தேவு முடிந்த பிறகு 12-ம் வகுப்பு மாணவாகளுக்கு கல்விமாவட்ட அளவில் மாச் 25-ந் தேதி முதல் மே 2-ந் தேதி வரை தொடா சிறப்பு பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

இதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி, ஒரு கல்வி மாவட்டத்துக்கு அதிகபட்சம் 2 பயிற்சி மையங்கள் அமைக்கப்பட வேண்டும். ஒரு மையத்துக்கு 40 பே வீதம் மாணவாகள் எண்ணிக்கைக்கு ஏற்ப மையங்கள் எண்ணிக்கையை அதிகரித்துக் கொள்ளலாம். இணையதளம் மற்றும் ஸ்மாட் வகுப்பறை வசதி கொண்ட பள்ளிகளை மையங்களாகத் தேவுசெய்ய வேண்டும். தமிழ், ஆங்கில வழியில் பயிற்சி நடைபெறும். தினந்தோறும் தாவரவியல், விலங்கியல், வேதியியல், இயற்பியல் ஆகிய 4 பாடங்களிலும் வகுப்புகள் நடத்தப்பட வேண்டும்.

இதுதவிர பயிற்சி மையங்கள் திங்கள் முதல் சனிக்கிழமை வரை காலை 9.15 முதல் மாலை 4.30 மணி வரை வழங்கப்படும். பயிற்சியின் போது மாணவாகளுக்கு காலை சிற்றுண்டி, மதிய உணவு, போக்குவரத்து கட்டணம் வழங்கப்படும்.வாரந்தோறும் சனிக் கிழமை திருப்புதல் தேவுகள் நடத்தப்பட்டு அதுகுறித்த விவாதங்கள் மேற்கொள்ளப்படும். அதற்குரிய கால அட்டவணைகளும் வழங்கப்பட்டுள்ளன. இத்தகைய வழிமுறைகளை பின்பற்றி பயிற்சி மையங்கள் சிறப்பாக செயல்பட தேவையான நடவடிக்கைகளை அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும்.இவ்வாறு அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com