நீட் மறு தேர்வு முடிவுகள் வெளியானது!

நீட்மறுதேர்வு கடந்த ஜூன் 21ம் தேதி நாடு முழுவதும் 550 நகரங்களில் உள்ள 5400-க்கும் மேற்பட்ட தேர்வு மையங்களில் நடைபெற்றது.
நீட் மறு தேர்வு முடிவுகள் வெளியானது!
Published on

சென்னை,

இளநிலை மருத்துவப் படிப்பு மாணவர் சேர்க்கைக்காக நாடு முழுவதும் கடந்த 3-ஆம் தேதி நீட் தேர்வு நடத்தப்பட்டது. இந்த நிலையில், ராஜஸ்தானின் சிகார் மாவட்டத்தில் தேர்வுக்கு முன்பாக இணையத்தில் பரவிய வினாத்தாள், நீட் தேர்வில் கேட்கப்பட்ட கேள்வித் தாளுடன் ஒத்துப் போவதாக சர்ச்சை வெடித்தது. இதையடுத்து தேர்வு ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து, நீட்மறுதேர்வு கடந்த ஜூன் 21ம் தேதி நாடு முழுவதும் 550 நகரங்களில் உள்ள 5400-க்கும் மேற்பட்ட தேர்வு மையங்களில் நடைபெற்றது. 22.79 லட்சம் மாணாக்காரர்கள் விண்ணப்பித்திருந்த நிலையில், தோராயமாக 20 லட்சம் பேர் தேர்வில் கலந்து கொண்டனர்.

நீட் மறு தேர்வு முடிவுகள் வரும் 20ஆம் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது நீட் மறு தேர்வுக்கான முடிவுகள் வெளியாகி உள்ளது. இதில் பஞ்சாப்பைச் சேர்ந்த ஆர்யன் குப்தா 715 மதிப்பெண்களும், ஹரியானாவைச் சேர்ந்த பான்ஷுல் பன்சால் 715 மதிப்பெண்களும் பெற்று முதலிடம் பிடித்துள்ளனர்.

மேலும், 138 மாணவர்கள் 690க்கும் அதிகமாக மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். இதனை தவிர, நீர் மறுதேர்வில் 11.21 லட்சம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளதாகவும், மாணவிகளில் 56.8 சதவீதத்தினரும், மாணவர்களில் 55.1 சதவீதத்தினரும் தேர்ச்சி பெற்றதாகவும் தேசிய தேர்வு முகமை தெரிவிக்கப்பட்டுள்ளது.

Attachment
PDF
20260716477215762
Preview
X

logo
Daily Thanthi
www.dailythanthi.com