16 மாணவர்களுக்காக நீட் மறுதேர்வு நடத்த முடியாது: ஐகோர்ட்டு திட்டவட்டம்


16 மாணவர்களுக்காக நீட் மறுதேர்வு நடத்த முடியாது: ஐகோர்ட்டு திட்டவட்டம்
x
தினத்தந்தி 3 July 2025 12:18 PM IST (Updated: 3 July 2025 12:32 PM IST)
t-max-icont-min-icon

நீட் மறுதேர்வு நடத்த உத்தரவிடக் கோரிய மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது உத்தரவிட்டது.

சென்னை,

இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு, நாடு முழுவதும் மே 4-ந்தேதி நடந்தது. அன்றைய தினம் சென்னையில் பெய்த கடும் மழை காரணமாக மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால் தங்களால் முறையாக தேர்வு எழுத முடியவில்லை எனக் கூறி, ஆவடி கேந்திரிய வித்யாலயா பள்ளி மையத்தில் தேர்வு எழுதிய 13 மாணவர்களும், குன்றத்தூர் அரசு மேல் நிலைப்பள்ளியில் தேர்வு எழுதிய 2 மாணவர்களும், கே.கே நகர் பத்ம ஷேசாத்ரி பள்ளியைச் சேர்ந்த 1 மாணவரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தனர். அந்த மனுக்களில், கடந்த மே 4-ந்தேதி நடந்த நீட் தேர்வை ரத்து செய்து, மறுதேர்வு நடத்த உத்தரவிட வேண்டும் எனக் கோரிக்கை விடுத்து இருந்தனர்.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், மறுதேர்வு நடத்த உத்தரவிட்டால் 20 லட்சம் மாணவர்கள் பாதிக்கப்படுவர் என நீதிபதிகள் தெரிவித்ததுடன். நீட் மறுதேர்வு நடத்த உத்தரவிடக் கோரிய மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

1 More update

Next Story