நெல்லை: இன்ஸ்டாகிராமில் அரிவாளுடன் இருக்கும் புகைப்படம் பதிவிட்ட 2 பேர் கைது

நெல்லையில் இன்ஸ்டாகிராமில் இரு பிரிவினரிடையே பிரச்சினையை தூண்டும் விதமாக அரிவாளுடன் இருக்கும் புகைப்படம் மற்றும் வீடியோ பதிவிட்ட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
நெல்லை: இன்ஸ்டாகிராமில் அரிவாளுடன் இருக்கும் புகைப்படம் பதிவிட்ட 2 பேர் கைது
Published on

நெல்லை மாவட்டம், விஜயநாராயணம் அருகே தாமரைகுளம், நடுத் தெருவை சேர்ந்த சண்முகவேல் மகன் மாடசாமி (வயது 22), தாமரைகுளம், தெற்கு தெருவை சேர்ந்த சின்னா மகன் வக்கீம் பாண்டியன் (வயது 19) ஆகிய இருவரும் சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமில் இருதரப்பினருக்கு இடையே பிரச்சினையை தூண்டும் வகையில் அரிவாளுடன் இருக்கக்கூடிய புகைப்படத்தையும், சர்ச்சைகுரிய வசனங்களை பதிவு செய்தும் அந்த வீடியோவை சமூக வலைதளத்தில் பரப்பியுள்ளனர். இதுகுறித்து விஜயநாராயணம் காவல் துறையினருக்கு தகவல் தெரியவந்ததை அடுத்து எஸ்.ஐ. உதயலட்சுமி வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டார். இதனையடுத்து சமூக வலைத்தளங்களில் இரு தரப்பினரிடையே பிரச்சினையை தூண்டும் விதமாக வீடியோவை வெளியிட்ட மாடசாமி, வக்கீம் பாண்டியன் இருவரையும் நேற்று (1.4.2025) கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்த நடவடிக்கை எடுத்தனர்.

திருநெல்வேலி மாவட்ட காவல் துறையினர் சமூக வலைத்தளங்களை உன்னிப்பாக கண்காணித்து வருகின்றனர். இதுபோன்று பொது அமைதியை சீர்குலைக்கும் வகையில் சமூக வலைத்தளங்களில் பதிவு செய்து பரப்புபவர்கள் மீது வழக்கு பதிவு செய்து கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி. சிலம்பரசன் தெரிவித்துள்ளார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com