நெல்லை: உவரியில் விசா இல்லாமல் தங்கியிருந்த அமெரிக்கர் கைது...!

உவரி அந்தோணியார் ஆலயத்தில் விசா இல்லாமல் சுற்றித்திரிந்த அமெரிக்காவை சேர்ந்த முதியவரை போலீசார் கைது செய்தனர்.
நெல்லை: உவரியில் விசா இல்லாமல் தங்கியிருந்த அமெரிக்கர் கைது...!
Published on

நெல்லை,

அமெரிக்காவின் வாசிங்டன் பகுதியை சேர்ந்தவர் வெரிட் என்ற ஸ்பெக்ட்(வயது 60). இவர் கடந்த 2019-ம் ஆண்டு ஜனவரி 16-ம் தேதி சுற்றுலா விசா மூலம் இந்தியா வந்து உள்ளார்.

அவரது விசா காலம் கடந்த 2021-ம் ஆண்டு மார்ச் மாதத்துடன் முடிவடைந்துள்ளது. விசா முடிந்து ஒரு வருடத்திற்குமேல் ஆன நிலையிலும் அமெரிக்கா செல்லாமல் இந்தியாவில் தங்கியிருந்து பல்வேறு மாநிலங்களுக்கு சென்றுள்ளார்.

இந்த நிலையில் நெல்லை மாவட்டம் உவரி அந்தோணியார் ஆலய பகுதியில் நேற்று இரவு சுற்றிதிரிந்த அவரை பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் கைது செய்தனர்.

அவரிடம் உவரி போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வி விசாரணை நடத்தினார். விசாரணையில் அவர் விசா முடிவடைந்த நேரம் கொரோனா காலம் என்பதால் நாட்டுக்கு அவரால் திரும்பி செல்ல முடியவில்லை. தற்போது மீண்டும் விசா பெற்று அமெரிக்கா செல்ல முயற்சி செய்து வருவது விசாரணையில் தெரியவந்து உள்ளது.

மேலும், அவர் கூறிய காரணம் உண்மைதானா என்று போலீசார் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்

X

Daily Thanthi
www.dailythanthi.com