

திருநெல்வேலி,
திருநெல்வேலி மாவட்டம், பத்தமடை பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன் (42). இவர் தச்சு தொழில் செய்து வந்தார். இவருக்கும், இவரது வீட்டிற்கு அருகிலுள்ள அண்டை வீட்டாருக்கும் இடையே வழிப்பாதை தொடர்பாக தகராறு இருந்தது.
வழிப்பாதையை சீரமைத்து தருமாறு அதிகாரிகளிடம் புகார் கொடுத்துள்ளார். ஆனால், அவர்கள் இதற்கான எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் மனமுடைந்த சீனிவாசன் ஒரு விபரீத முடிவை எடுத்தார். வழிப்பாதையை சீரமைக்க கோரி அதிகாரிகளிடம் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை.
எந்தவொரு தீர்வும் கிடைக்காத நிலையில் விரக்தியடைந்த அவர், நேற்று பத்தமடை காவல் நிலையத்திற்கு சென்றார். அங்கு யாரும் எதிர்பாராத நிலையில், தனது உடலில் பெட்ரோல் ஊற்றிக்கொண்டு காவல் நிலையத்திற்குள் ஓடியுள்ளார். இதையடுத்து அங்கிருந்த போலீஸார் தீயை அணைத்து, அவரை உடனடியாக அருகிலுள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.