நெல்லையில் இரட்டை கொலை வழக்கு குற்றவாளி குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது

நெல்லை மாநகரில் கஞ்சா போதை பொருள் விற்பனை செய்து, பொது சுகாதார பராமரிப்பிற்கு குந்தகம் விளைவித்து வந்த மருந்து சரக்கு குற்றவாளி குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
குண்டர் சட்டத்தில் கைது.
Published on: 

நெல்லை,

நெல்லை மாநகரில் இரட்டை கொலை வழக்கில் சம்பந்தப்பட்டு, பொது ஒழுங்கு பராமரிப்பிற்கு குந்தகம் விளைவிக்கும் செயலில் ஈடுபட்டு வந்த நபர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

இரட்டை கொலை வழக்கு குற்றவாளி குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது

திருநெல்வேலி டவுண், மணிப்புரத்தைச் சேர்ந்த நடராஜன் மகன் செந்தில்குமார் (வயது 42) என்பவர் நெல்லை மாநகரப் பகுதியில் இரட்டை கொலை வழக்கில் சம்பந்தப்பட்டு, பொது ஒழுங்கு பராமரிப்பிற்கு குந்தகம் விளைவிக்கும் செயலில் ஈடுபட்டு வந்தார். இதன் காரணமாக திருநெல்வேலி சந்திப்பு காவல் நிலைய இன்ஸ்பெக்டரின் பரிந்துரையின் பேரில், திருநெல்வேலி மாநகர போலீஸ் கமிஷனரின் உத்தரவுப்படி நேற்று குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் பாளையங்கோட்டை மத்திய சிறையில் தடுப்புக்காவலில் அடைக்கப்பட்டார்.

மருந்து சரக்கு குற்றவாளி குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது

திருநெல்வேலி டவுண், முத்துராமலிங்கபுரத்தைச் சேர்ந்த மாரிமுத்து மகன் தங்கதுரை(23) என்பவர் நெல்லை மாநகர பகுதியில் கஞ்சா போதை பொருள் விற்பனை செய்து எதிர்மறை கண்காணிப்பிற்கு வந்து, பொது ஒழுங்கு மற்றும் பொது சுகாதார பராமரிப்பிற்கு குந்தகம் விளைவித்து வந்த "மருந்து சரக்கு குற்றவாளி" ஆவார். இதன் காரணமாக திருநெல்வேலி டவுண் காவல் நிலைய இன்ஸ்பெக்டரின் பரிந்துரையின் பேரில் நெல்லை மாநகர போலீஸ் கமிஷனரின் உத்தரவுப்படி நேற்று குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் பாளையங்கோட்டை மத்திய சிறையில் தடுப்புக்காவலில் அடைக்கப்பட்டார்.

X

Follow us on Google
Daily Thanthi
www.dailythanthi.com