நெல்லை: விக்கிரமசிங்கபுரம் அருகே தோட்டத்தில் இறந்து கிடந்த பெண் கரடி

சுமார் 8 வயதுடைய பெண் கரடி நேற்று திடீரென இறந்து கிடந்தது.
நெல்லை: விக்கிரமசிங்கபுரம் அருகே தோட்டத்தில் இறந்து கிடந்த பெண் கரடி
Published on

நெல்லை,

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் வனக்கோட்டம் வடமலைசமுத்திரம் கிராமம், இந்தியன் பெட்ரோல் நிலையம் பின்புறம் அமைந்துள்ள செய்யது சுலைமான் என்பவரின் தோட்டப்பகுதியில் சுமார் 8 வயதுடைய பெண் கரடி நேற்று மாலை 5 மணியளவில் திடீரென இறந்து கிடந்தது.

இதுகுறித்த தகவல் அறிந்தவுடன், துணை இயக்குனர் மற்றும் வன கால் நடை மருத்துவக் குழுவினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர். தொடர்ந்து, விதிமுறைகளின்படி கரடியின் உடற்கூறு ஆய்வு மேற்கொள்ள தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டன. உடற்கூறு ஆய்வு மற்றும் ஆய்வகப் பரிசோதனை அறிக்கைகள் கிடைத்த பின்னர் கரடியின் உயிரிழப்பிற்கான காரணம் உறுதி செய்யப்படும் என வனத்துறையினர் தெரிவித்தனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com