நெல்லை: கன்னிமாறன் ஓடையில் திடீர் வெள்ளம் - குளிக்க சென்ற 15 பேரை மீட்கும் பணி தீவிரம்

நெல்லை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது.
நெல்லை: கன்னிமாறன் ஓடையில் திடீர் வெள்ளம் - குளிக்க சென்ற 15 பேரை மீட்கும் பணி தீவிரம்
Published on

சென்னை,

நெல்லை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வந்த நிலையில் 2 நாட்களாக சற்று குறைந்துள்ளது. ஆனாலும் மேற்கு தொடர்ச்சி மலையையொட்டிய பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்வதால் அணைகளுக்கு வரும் நீரின் அளவு அதிகரித்துள்ளது.

இந்த நிலையில் நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகே உள்ள கன்னிமாறன் ஓடையில் மழை காரணமாக தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. இந்த நிலையில், கன்னிமாறன் ஓடையில் குளிப்பதற்காக 11 ஆண்கள், 4 பெண்கள் என மொத்தம் 15 பேர் சென்றுள்ளனர்.

தண்ணீர் குறைவாக இருந்ததால் அனைவரும் கன்னிமாறன் ஓடையைக் கடந்து மறு கரைக்கு சென்று குளித்துள்ளனர். திடீரென ஓடையில் அதிகளவு தண்ணீர் வரத் தொடங்கி, வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இதில் 14 பேர் கரையின் மறுபக்கம் சிக்கிய நிலையில், ஒருவர் மட்டும் வெள்ளத்தின் நடுவே பாறையில் சிக்கித் தவித்துள்ளார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த, வள்ளியூர் காவல் துறையினர் மற்றும் தீயணைப்பு மீட்புப்படையினர், வெள்ளத்தில் சிக்கி உள்ளவர்களை மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com