நெல்லை: திரையரங்கில் மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டுவீச்சு

நெல்லையில் அமரன் திரைப்படம் திரையிடப்பட்ட திரையரங்கம் மீது இன்று அதிகாலை பெட்ரோல் குண்டு வீசப்பட்டு உள்ளது.
நெல்லை: திரையரங்கில் மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டுவீச்சு
Published on

நெல்லை,

நெல்லையில் மேலப்பாளையம் பகுதியில் அமரன் திரைப்படம் திரையிடப்பட்ட திரையரங்க வளாகத்திற்குள் இன்று அதிகாலை 3 மணியளவில் மர்ம நபர்கள் சிலரால் பெட்ரோல் குண்டு வீசப்பட்டு உள்ளது. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட 2 பேர் பெட்ரோல் குண்டுகளை வீசிவிட்டு தப்பியோடி விட்டனர். மொத்தம் 3 பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டு உள்ளன.

இதனால், பொருட்சேதம் எதுவும் இல்லை. சம்பவம் பற்றி சி.சி.டி.வி. காட்சிகளை கைப்பற்றி காவல் துறை விசாரணை நடத்தி வருகின்றனர். தப்பியோடிய 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர். இதுபற்றி விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இந்த படம் அனைவராலும் பாராட்டப்பட்டபோதிலும், ஒரு சில எதிர்ப்புகளும் கிளம்பி வருகின்றன. திரைப்படத்தில் காஷ்மீரில் உள்ள இஸ்லாமிய மக்களை, தீவிரவாதிகள் போன்று சித்தரித்துள்ளனர் என கூறி எதிர்ப்பு எழுந்துள்ளது. இதனால், சென்னை ராயப்பேட்டையில் உள்ள உட்லண்ட்ஸ் திரையரங்கம், விருகம்பாக்கம், வடபழனியில் உள்ள கமலா திரையரங்கம் மற்றும் போரம்மாலில் உள்ள திரையரங்கிற்கு போலீஸ் பாதுகாப்பு பேடப்பட்டது.

இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் கடந்த மாதம் 31-ம் தேதி தீபாவளியன்று அமரன் படம் வெளியானது. கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் தயாரிக்கப்பட்ட இந்த படம், மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையை அடிப்படையாக கொண்டு உருவாகி உள்ளது. இப்படத்தில் முகுந்த் வேடத்தில் சிவகார்த்திகேயனும், அவருடைய மனைவி இந்து ரெபேக்கா வேடத்தில் சாய் பல்லவியும் நடித்துள்ளனர். இப்படம் இதுவரை ரூ.200 கோடிக்கு மேல் வசூலித்து உள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com