நெல்லை: மூதாட்டியை பாலியல் பலாத்காரம் செய்து 2 சவரன் தங்க சங்கிலி பறிப்பு- வாலிபர் கைது, தங்க சங்கிலி மீட்பு

நெல்லை பணகுடி பகுதியில் மூதாட்டியை பாலியல் பலாத்காரம் செய்து 2 சவரன் தங்க சங்கிலியை பறித்த வாலிபரை போலீசார் சில மணி நேரத்தில் வளைத்து பிடித்தனர்.
நெல்லை: மூதாட்டியை பாலியல் பலாத்காரம் செய்து 2 சவரன் தங்க சங்கிலி பறிப்பு- வாலிபர் கைது, தங்க சங்கிலி மீட்பு
Published on

நெல்லை மாவட்டம், பணகுடி, பெருங்காளியாபுரம் கிராமத்தைச் சேர்ந்த 60 வயது பெண்மணி நேற்று தனது வீட்டின் அருகே உள்ள தோட்டத்தில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்த சமயத்தில், காவல்கிணறை சேர்ந்த ஒரு வாலிபர் தனது மோட்டார் சைக்கிளில் வந்து மேற்சொன்ன மூதாட்டியை பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சித்தபோது, அந்த மூதாட்டி சத்தம் போடவே, அவரை தாக்கிவிட்டு, பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அதன் பின்னர் அந்த மூதாட்டியிடம் இருந்து சுமார் 2 சரவன் எடையுள்ள தங்கச் சங்கிலியை அந்த வாலிபர் பறித்துச் சென்றுள்ளார்.

இதுகுறித்து தகவல் கிடைத்தவுடன் சம்பவ இடத்திற்கு திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி. சிலம்பரசன் விரைந்து சென்று சம்பவ இடத்தை பார்வையிட்டார். பாதிக்கப்பட்ட பெண்மணி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில், அவரிடம் வாக்குமூலம் பெறப்பட்டு அதன் அடிப்படையில் வள்ளியூர் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சாந்தி வழக்கு பதிவு செய்தார்.

இதனையடுத்து மாவட்ட எஸ்.பி. சிலம்பரசன் உத்தரவுப்படி, வள்ளியூர் டி.எஸ்.பி. வெங்கடேசன் தலைமையில் 5 தனி படைகள் அமைக்கப்பட்டு, குற்றவாளியை கைது செய்யும் பணி முடுக்கி விடப்பட்டது. இதன் தொடர்ச்சியாக, போலீசார் குற்றவாளியை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட குற்றவாளியிடம் இருந்து மூதாட்டியிடம் பறிக்கப்பட்ட தங்க சங்கிலி மீட்கப்பட்டது. புலன் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இக்குற்ற சம்பவத்தில், சம்பவம் நடைபெற்ற சில மணி நேரத்திலேயே குற்றவாளியை கைது செய்த வள்ளியூர் டி.எஸ்.பி. மற்றும் தனிப்படையினரை மாவட்ட எஸ்.பி. பாராட்டினார். 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com