நெல்லை: தாமிரபரணி ஆற்றில் மூழ்கி வாலிபர் பலி

ஆற்றின் ஆழமான பகுதிக்கு சென்றதால் தண்ணீரில் மூழ்கினார்.
நெல்லை: தாமிரபரணி ஆற்றில் மூழ்கி வாலிபர் பலி
Published on

நெல்லை,

சென்னை முகலிவாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் தினகரன் மகன் குணா (வயது 38). இவர் சென்னையில் தனியார் மென்பொருள் நிறுவனத்தில் என் ஜினீயராக பணியாற்றி வந்தார். இவருக்கு மனைவி, குழந்தைகள் உள்ளனர். இவர் கோடை விடுமுறையையொட்டி தனது குடும்பத்துடன் தென்காசி மாவட்டம் கடையம் அருகே மடத்தூரில் உள்ள உறவினர் வீட்டுக்கு வந்தார்.

நேற்று மதியம் குணா தனது குடும்பத்தினர், உறவினர்களுடன் வேனில் நெல்லை மாவட்டம் அம்பை சின்ன சங்கரன்கோவில் தாமிரபரணி ஆற்றில் குளிக்க சென்றார். அனைவரும் ஆற்றில் குளித்து கொண்டிருந்தனர். அப் போது எதிர்பாராதவிதமாக குணா ஆற்றின் ஆழமான பகுதிக்கு சென்றதால் தண்ணீரில் மூழ்கினார். இதனைப் பார்த்த குடும்பத்தினர், அவரை காப்பாற்ற முயன்றனர். ஆனாலும் அவரை மீட்க முடியவில்லை. இதுபற்றி தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து ஆற்றில் மூழ்கி இறந்த நிலையில் குணாவின் உடலை மீட்டனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com