ஆதனூரில் புதிய அங்கன்வாடி மையம்

ஆதனூரில் புதிய அங்கன்வாடி மையம் திறக்கப்பட்டது.
ஆதனூரில் புதிய அங்கன்வாடி மையம்
Published on

தோகைமலை அருகே ஆதனூர் சிவாயம் பகுதியில் குழந்தைகளின் வசதிக்காக அங்கன்வாடி மையம் கட்டி தர வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். அதன்பேரில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின் கீழ் ரூ.9 லட்சத்து 55 ஆயிரம் நிதி ஒதுக்கப்பட்டு, அங்கன்வாடி மையம் கட்டி முடிக்கப்பட்டு திறப்பு விழா நேற்று நடைபெற்றது. இதில் குளித்தலை எம்.எல்.ஏ. மாணிக்கம் கலந்து கொண்டு, அங்கன்வாடி மையத்தை திறந்து வைத்தார். இதில், ஊராட்சி மன்ற தலைவர், கட்சி நிர்வாகிகள், அங்கன்வாடி பணியாளர்கள், ஆசிரியர்கள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com